பொதுச் சேவையில் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள விநாயகர் கோவிலில் இன்று காலை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
டெல்லி சரோஜினி நகரில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய மக்கள் அனைவரினதும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், கடவுளின் அருள் அனைவருக்கும் நல்வாழ்வை வழங்குவதுடன், இந்தியா தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையில் முன்னேற வேண்டும் எனவும் பிரார்த்தித்ததாக மோடி குறிப்பிட்டுள்ளார்.


