Saturday, September 19, 2026
spot_img
Homeஉலக செய்திகள்நடுவானில் பயணிகளிடையே கைகலப்பு

நடுவானில் பயணிகளிடையே கைகலப்பு

லண்டனிலிருந்து பங்களாதேஷ் நோக்கிப் பயணித்த “பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்” விமானத்தில், இரண்டு பயணிகளுக்கு இடையே நடுவானில் கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானம் பறந்து கொண்டிருந்தபோது, இரண்டு ஆண் பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட நிலையில், ஒரு பயணியின் சட்டை கிழிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்தையடுத்து, விமானப் பணிப்பெண்கள் மற்றும் சக பயணிகள் தலையிட்டு இருவரையும் விலக்கி, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சம்பவம் தொடர்பில் விமான நிறுவன அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments