தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள சுற்றுலாத் தீவான பூக்கெட்டில், இன்று(16) வணிகக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர்.
அதிகாலை சுமார் 3.17 மணியளவில் வாகன வாடகை நிறுவனம் இயங்கி வந்த கட்டிடத்தில் தீ பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் தீ அருகிலிருந்த கட்டிடங்களுக்கும் தீ பரவியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் சுமார் இரண்டு மணிநேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 15 பேர் தாய்லாந்து நாட்டவர்கள் என்றும், ஒருவர் மியான்மர் நாட்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களும் காயமடைந்தவர்களும் சுற்றுலாப் பயணிகள் அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


