Friday, June 19, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தமிழகக் கடற்கரையில் இலங்கை மீனவரின் சடலம்

தமிழகக் கடற்கரையில் இலங்கை மீனவரின் சடலம்

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற போது கடலில் தவறி விழுந்து காணாமல்போன இலங்கை மீனவரின் சடலம்இ தமிழகத்தின் கோடிக்கரை கடற்கரையில் இன்று வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நெடுந்தீவுப் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கடந்த 12 ஆம் திகதி கடலுக்குச் சென்ற சமயம்இ எதிர்பாராதவிதமாகக் கடலில் தவறி விழுந்து காணாமல்போனார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்இ இன்று அவர் தமிழகத்தின் கோடிக்கரை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இலங்கை மீனவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளமை குறித்துத் தமிழகப் பொலிஸார் உடற்கூற்றுப் பரிசோதனைகளுடன் கூடிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments