Sunday, September 27, 2026
spot_img
Homeஉலக செய்திகள்‘ட்ரம்ப் நீரிணை’ என ஹோர்முஸ் நீரிணைக்கு பெயர் சூட்டிய அமெரிக்க ஜனாதிபதி

‘ட்ரம்ப் நீரிணை’ என ஹோர்முஸ் நீரிணைக்கு பெயர் சூட்டிய அமெரிக்க ஜனாதிபதி

ஹோர்முஸ் நீரிணையை ‘ட்ரம்ப் நீரிணை’ எனக் குறிப்பிட்ட வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரான் – அமெரிக்கா இடையிலான மோதல் தொடரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் சர்வதேச அளவில் பதற்றம் நிலவி வருகிறது. உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை பாதிக்கப்பட்டுள்ளதால், பல நாடுகளில் எரிபொருள் விநியோகம் மற்றும் விலைகளில் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், வளைகுடா பிராந்தியத்தின் வரைபடத்தில் ஹோர்முஸ் நீரிணை அமைந்துள்ள பகுதியை வட்டமிட்டு, அதற்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயரிடப்பட்டுள்ள படத்தை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

முன்னதாகவும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ட்ரம்ப் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments