Saturday, August 8, 2026
spot_img
Homeகனடா செய்திகள்டொராண்டோ மேயர் தேர்தல் கருத்துக் கணிப்பு!

டொராண்டோ மேயர் தேர்தல் கருத்துக் கணிப்பு!

கனடாவின் டொராண்டோ மேயர் தேர்தலுக்கான ரேஸில் தற்போதைய மேயர் ஒலிவியா சௌ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

புதிதாகக் களமிறங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாண்டர் 10 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

லியாசன் ஸ்ட்ராடஜீஸ் நிறுவனம் ஆகஸ்ட் 4 மற்றும் 5-ஆம் திகதிகளுக்கு இடையில் 1,000 டொராண்டோவாசிகளிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒலிவியா சௌ: 47% , பிராட் பிராட்போர்ட்: 40% , கிறிஸ் அலெக்ஸாண்டர்: 10% மற்றும் மற்ற வேட்பாளர்கள்: 3% வாக்குகள் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கிறிஸ் அலெக்ஸாண்டர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வில், ‘மற்ற வேட்பாளர்களுக்கு’ 10% ஆதரவு இருந்தது.

தற்போது அந்த ஆதரவு அலெக்ஸாண்டரை நோக்கி நகர்ந்துள்ளதாக லியாசன் ஸ்ட்ராடஜீஸ் தலைவர் டேவிட் வலன்டின் தெரிவித்துள்ளார்.

முடிவெடுக்காத வாக்காளர்கள் உட்பட அனைத்து மக்களிடமும் நடத்தப்பட்ட கணிப்பில், ஒலிவியா சௌ 38%, பிராட்போர்ட் 32%, அலெக்ஸாண்டர் 8% ஆதரவைப் பெற்றுள்ளனர்.

இன்னும் 20 சதவீத வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்காமல் உள்ளனர். தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் இந்த 20% வாக்காளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments