Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்டொன் பிரியசாத் படுகொலை ; துப்பாக்கிதாரியை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவு

டொன் பிரியசாத் படுகொலை ; துப்பாக்கிதாரியை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவு

டொன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை (02) காலை கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரியை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு மேல்மாகாண பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு, கருவாத்தோட்டம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி இன்று சனிக்கிழமை (03) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரியை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்குமாறு மேல்மாகாண பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்தில் கொண்ட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொழும்பு வெல்லம்பிட்டி பிரதேசத்தில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வைத்து கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி டொன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments