Thursday, July 2, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்டெங்கு நோயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரிப்பு

டெங்கு நோயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், நேற்று (1) ஒரே நாளில் மட்டும் 1,025 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதனையடுத்து, நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 56,422 ஆக உயர்ந்துள்ளது.

டெங்கு பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், கொசு பெருகும் இடங்களை உடனடியாக அகற்றி சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments