Monday, August 17, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சிறைச்சாலைக்குள் குயினாக மாறும் இஷாரா செவ்வந்தி

சிறைச்சாலைக்குள் குயினாக மாறும் இஷாரா செவ்வந்தி

சிறைச்சாலைக்குள் குயினாக மாறும் இஷாரா செவ்வந்தி

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் சூட்கேஸ் சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைக்குள் குயினாக மாறும் இஷாரா செவ்வந்தி

பெண்களை சிறைக்கு அழைத்துச்செல்லும்போது அவர்களுக்கு கைவிலங்கு இடப்படுவதில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, அவர் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது சட்டவிரோதமான எதுவும் நடக்கவில்லை என்பதால் எந்த விசாரணையும் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

அவர் தற்போது அங்குனுகொலப்பலெஸ்ஸ சிறையில் ஏனைய சந்தேகநபர்களுடன் தங்கியிருப்பதாகவும், அவருக்கு எந்தவிதமான சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அங்குனுகொலப்பலெஸ்ஸ சிறையில் உள்ள பல கைதிகள் இஷாரா செவ்வந்தியை பற்றி அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இருப்பினும், சிறைச்சாலை அதிகாரிகள் இஷாரா செவ்வந்தியை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அதனால் அவருடன் அதிக தொடர்பைப் பேண முடியாது என்றும் அங்குனுகொலப்பலெஸ்ஸ சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments