Sunday, June 7, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்டி20 கேப்டன் பதவியில் இருந்து ரோவ்மன் பவல் நீக்கம் - விமர்சித்த பிராவோ

டி20 கேப்டன் பதவியில் இருந்து ரோவ்மன் பவல் நீக்கம் – விமர்சித்த பிராவோ

கேப்டன் பதவியில் இருந்து பவல் நீக்கப்பட்டதை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிராவோ விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது ,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தில் வீரர்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்கின்றன என்பதை கரீபியன் மக்களுக்கும் கிரிக்கெட் உலகிற்கும் மீண்டும் ஒருமுறை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்.ஒரு முன்னாள் வீரராகவும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் ரசிகராகவும் என்னைப் பொறுத்தவரையில் இது மிக மோசமான முடிவுகளில் ஒன்றாகும். நமது டி20 அணி 9-வது இடத்தில் இருந்தபோதும் கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்டு ரோவ்மன் பவல், அணியை தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேற உதவினார். ஆனால் தற்போது அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளீர்கள். இது போன்ற ஒரு கேப்டனை நீக்கள் நீக்கியதற்கு என்ன காரணத்தை கூறுவீர்கள்.என்று பிராவோ விமர்சித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments