Thursday, August 27, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஜனாதிபதி மல்வத்து, அஸ்கிரி மகா நாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்

ஜனாதிபதி மல்வத்து, அஸ்கிரி மகா நாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்

 

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தளதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (27) பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி தரப்பு மகா நாயக்க தேரர்கள் உட்பட அனுநாயக தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றார்.

முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மல்வத்து தரப்பின் மகா நாயக்க அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள மகா நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றதுடன், அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து, மல்வத்து தரப்பின் அனுநாயக அதிவணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம அனுநாயக தேரரையும் சந்தித்து, அவரிடமும் ஆசி பெற்றதோடு சிறுகலந்துரையாடல் மேற்கொண்டார்.

அடுத்து அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அஸ்கிரி தரப்பின் மகா நாயக்க அதிவணக்கத்திற்குரிய வராகொட ஸ்ரீ ஞானரதன மகா நாயக்க தேரரின் நலன் விசாரித்ததோடு அவருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மத்திய மாகாண ஆளுநர் நிபுணத்துவ வைத்தியர் ஹர்ச சுரங்கவும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments