சென்னையில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, காணொளியையும் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க, சாதி – மதம் – அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்! இதற்காக அடுத்த 45 நாட்கள், கழக மாவட்டச் செயலாளர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் – மூத்த முன்னோடிகள் என அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


