Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சர்வஜன அதிகாரம் வௌியிட்டுள்ள கண்டனம்!

சர்வஜன அதிகாரம் வௌியிட்டுள்ள கண்டனம்!

அரசாங்கத்தால் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு தொடுக்கப்பட்ட அரசியலமைப்புக்கு முரணான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக சர்வஜன அதிகாரம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான ரஞ்சன் செனவிரத்ன, சம்பந்தப்பட்ட கூற்றுக்கள் ஆத்திரமூட்டும் தன்மை கொண்டவை என்றும் அரசியலமைப்பு ரீதியாக நியாயப்படுத்த முடியாதவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதித்துறை நிர்வாகத்தின் விருப்பங்களுக்கு அடிபணியச் செய்வதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சி இது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது வெறும் அரசியல் விமர்சனம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் சர்வஜன அதிகாரம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments