Saturday, June 13, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

நியூசிலாந்து அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கேன் வில்லியம்சன் (Kane Williamson), சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவரது 16 ஆண்டுகால  சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை இத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து வகையான போட்டி வடிவங்களிலும் (Tests, ODIs, T20Is) அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற பெருமையுடன் கேன் வில்லியம்சன் சர்வதேச அரங்கிலிருந்து விடைபெறுகிறார்.

அவரின் திடீர் ஓய்வு அறிவிப்பு, அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், “சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் சில காலமாகச் சிந்தித்து வந்தேன். தற்போது அதற்கான சரியான நேரம் இதுவென்பது தெளிவாகத் தெரிகிறது. நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் எனது முழு பங்களிப்பையும் வழங்கியுள்ளேன் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது சொந்த விருப்பத்தின் பேரில் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிக்கொள்வதை இலாபகரமாகக் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் கிண்ணத்தை, கேன் வில்லியம்சன் தலைமையில் நியூஸிலாந்து அணி வென்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments