Tuesday, November 17, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு சர்வதேச அங்கீகாரம்!

கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு சர்வதேச அங்கீகாரம்!

கனடாவின் பிரதமர் மார்க் கார்னிக்கு  2026ஆம் ஆண்டுக்கான ஜனநாயகப் பதக்கத்தை வழங்குவதற்கு சர்வதேச அரசியல் ஆலோசகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

ஸ்பெயினின் செவில்லா (Seville) நகரில் நேற்று மாலை நடைபெற்ற சர்வதேச அரசியல் ஆலோசகர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் இந்த விருது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவிருந்தது.

எனினும், அடுத்த சில நாட்களுக்கு ஆசிய நாடுகளுக்கான பயணத்தில் பிரதமர் மார்க் கார்னி ஈடுபட்டுள்ளதால், அவரால் நேரில் கலந்துகொண்டு விருதைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

1968ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச அரசியல் ஆலோசகர்கள் சங்கம், 1982ஆம் ஆண்டு முதல் ஜனநாயகப் பதக்கத்தை வழங்கி வருகின்றது.

இதற்கு முன்னர் ரஷ்ய ஜனநாயகச் செயற்பாட்டாளர் அலெக்ஸி நவல்னி, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி மற்றும் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

2026ஆம் ஆண்டுக்கான விருது மார்க் கார்னிக்கு வழங்கப்படுவதற்கான காரணம் குறித்து சங்கத்தின் தலைவர் மார்கோ ராகர் வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையில், தற்போதைய சர்வதேச அரசியல் சூழல் வேகமாக மாறிவரும் நிலையில், தெளிவான சிந்தனையையும் தலைமைத்துவத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உலக அரசியல் ஒழுங்கையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாப்பதில் நடுத்தர வல்லரசு நாடுகளும் ஒன்றிணைந்து முக்கிய பங்காற்ற முடியும் என்பதை மார்க் கார்னி எடுத்துக்காட்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா பிரதமருக்கு வழங்கப்படவுள்ள இந்த சர்வதேச அங்கீகாரம், கனடாவின் சர்வதேச அரசியல் பங்களிப்பு குறித்த கவனத்தையும் அதிகரித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments