Monday, July 13, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் வாடகை வீடுகளில் இரகசிய கேமராக்களை பொருத்திய வீட்டு உரிமையாளர் கைது!

கனடாவில் வாடகை வீடுகளில் இரகசிய கேமராக்களை பொருத்திய வீட்டு உரிமையாளர் கைது!

கல்கரி நகரில் உள்ள வாடகை வீடுகளில் பல இரகசிய கேமராக்களைப் பொருத்தி, வாடகைக்கு இருந்தவர்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கரி கட்டடமொன்றில் வசிக்கும் வாடகைதாரர் ஒருவர், தனது குளியலறையில் இருந்த மின்கல அலை பாதுகாப்பு சாதனத்திலும் மற்றும் படுக்கையறையில் இருந்த புகை கண்டறியும் கருவியிலும் சிறிய இரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததைக் கண்டறிந்துள்ளார்.

இதனை அவர் ஏனைய வாடகைதாரர்களுக்கும் தெரிவிக்க, அவர்களும் தங்களது படுக்கையறைகளில் இரகசிய கேமராக்கள் இருப்பதைக் கண்டுபிடித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஜூன் 12ஆம் திகதி, ஸ்பிரிங்பரோ வே பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்திய புலனாய்வு அதிகாரிகள், அங்கிருந்து பல மின்னணு சேமிப்பு சாதனங்களை பறிமுதல் செய்தனர்.

பிரெண்ட்வுட் வீதியில் உள்ள எல்பிஷ்லாவியின் மற்றொரு வாடகை வீட்டிலும் இதேபோன்ற கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய 41 வயதுடைய சூரியோங் பார்க் என்ற வீட்டு உரிமையாளர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். இவர் ‘நிக் பார்க்’ என்ற போலிப் பெயரையும் பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.

இவர் மீது அத்துமீறி நுழைந்தமை மற்றும் ஐந்து உளவு பார்த்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சந்தேக நபர் எதிர்வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments