Tuesday, October 13, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் வரலாறு காணாத அளவுக்குச் சரிந்த பிறப்பு விகிதம்!

கனடாவில் வரலாறு காணாத அளவுக்குச் சரிந்த பிறப்பு விகிதம்!

கனடாவில் கடந்த 2025-ஆம் ஆண்டிலும் நாட்டின் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்குக் குறைவான நிலையிலேயே தொடர்வதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கனடா புள்ளிவிவரத் துறையின் அண்மைய தரவுகளின்படி, அங்கு ஒரு பெண் ஈன்றெடுக்கும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை 1.26 ஆகப் பதிவாகியுள்ளது. இது 2024-ஆம் ஆண்டில் பதிவான மிகக் குறைந்த அளவிலேயே மாற்றமின்றி நீடிக்கிறது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் இந்த மந்தமான நிலையே காணப்படுகிறது.

உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 உயர் வருமானம் கொண்ட நாடுகளின் பட்டியலில், மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ள நாடுகளில் கனடா 7-வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா 1.57 குழந்தைகளுடன் அதிகபட்சமாகவும், தென் கொரியா 0.80 என்ற எண்ணிக்கையுடன் ஆகக் குறைந்த அளவிலும் உள்ளன.

மேலும், கனடாவில் குழந்தைகள் பெற்றெடுக்கும் தாய்மார்களின் சராசரி வயது 31.9 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது கடந்த 1976-ஆம் ஆண்டில் 26.7 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. வயது அதிகரிக்கும்போது கருத்தரிப்பதில் இயற்கையாகவே தாமதம் ஏற்படுவது பிறப்பு விகிதச் சரிவுக்கு மற்றொரு முக்கிய காரணியாக அமைகிறது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, கடுமையான பொருளாதார நெருக்கடி, நவீன வாழ்க்கை முறை, பணிச்சூழல் மற்றும் நாள்பட்ட மன அழுத்தம் ஆகியவை குடும்பக் கட்டுப்பாடு மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போட வைக்கின்றன. அத்துடன், எண்டோமெட்ரியோசிஸ் போன்ற மருத்துவ ரீதியான உடல்நலப் பிரச்சினைகளும் பெண்களின் இனப்பெருக்க நலனில் பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments