Tuesday, November 17, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் பொலிஸ் வாகனம் விபத்து – அதிகாரி படுகாயம்

கனடாவில் பொலிஸ் வாகனம் விபத்து – அதிகாரி படுகாயம்

கனடாவின் டொராண்டோவுக்கு அருகிலுள்ள விட்பி (Whitby) பகுதியில், பொலிஸ் வாகனமும் பொதுமக்களின் வாகனமும் மோதிய விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில், ப்ரொக் வீதி (Brock Street) மற்றும் நெடுஞ்சாலை 401 சந்திப்புக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இதில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி, டொராண்டோ பகுதியிலுள்ள அதிரடிச் சிகிச்சைப் பிரிவைக் கொண்ட வைத்தியசாலைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும், அவர் தற்போது நிலையான நிலையில் இருப்பதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸ் சேவை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் தொடர்புடைய ஏனைய தரப்பினருக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த பொலிஸ் அதிகாரி அவசர அழைப்பொன்றுக்குப் பதிலளிப்பதற்காகச் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என டர்ஹாம் பிராந்திய பொலிஸ் சேவையின் தற்காலிக சார்ஜன்ட் நிக்கலஸ் க்ளக்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், ப்ரொக் வீதியின் நெடுஞ்சாலை 401 சந்திப்பிலுள்ள வடக்கு மற்றும் தெற்கு நோக்கிய பாதைகளும், நெடுஞ்சாலை 401 இன் கிழக்கு நோக்கிய பாதைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments