Monday, October 12, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் பாலியல் குற்றவாளி விடுதலை: காவல்துறை எச்சரிக்கை

கனடாவில் பாலியல் குற்றவாளி விடுதலை: காவல்துறை எச்சரிக்கை

கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் கடுமையான குற்றப் பின்னணி கொண்ட பாலியல் குற்றவாளி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை விடுதலையாவதை முன்னிட்டு, அங்குள்ள காவல்துறை சனிக்கிழமையன்று அவசர சமூகப் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நாற்பத்தெட்டு வயதான கீத் தியோடர் கான்ஸ்டன்டின் என்ற அந்த நபர், சமூகத்திற்கு குறிப்பாகக் குழந்தைகளுக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடியவர் என்று புலனாய்வுத் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

இவர் இதற்கு முன்னர் ஆயுதமேந்திய பாலியல் தாக்குதல், கொள்ளை, வெடிபொருட்கள் வைத்திருத்தல், மிரட்டல் விடுத்தல் மற்றும் தாக்குதல் போன்ற பல தீவிர குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர் ஆவார்.

மேலும், கடந்த 2025 மார்ச் மாதம் உட்பட பல முறை நன்னடத்தை விதிமுறைகளை மீறிய வரலாறும் இவருக்கு உள்ளது. இதன் காரணமாக அவரது நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

விடுதலையாகும் நிபந்தனைகளின்படி, அவர் தனது உடலில் எப்போதும் GPS கண்காணிப்பு கருவியை அணிந்திருக்க வேண்டும் மற்றும் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரையிலான ஊரடங்கு உத்தரவைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். மேலும் வாரந்தோறும் டர்ஹாம் பிராந்திய காவல் நிலையத்தில் நேரில் முன்னிலையாக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பதினாறு வயதுக்குட்பட்ட எவருடனும் தொடர்பு கொள்ளவோ பழகவோ அவருக்கு அனுமதி கிடையாது. இணையம் மற்றும் தகவல் தொடர்பு வலைப்பின்னல்களைப் பயன்படுத்தவும், ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மற்றும் மதுபானங்களை வைத்திருக்கவும் அவருக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் போன்ற சிறுவர்கள் கூடும் இடங்களுக்கு இருபத்தொரு வயதுக்கு மேற்பட்ட ஒருவரின் துணையின்றி செல்லக் கூடாது.
இந்நபரின் நடமாட்டங்கள் குறித்து சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments