கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில், அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகொட 07 சோதனைச் சாவடிப் பகுதி இன்று (22) இரவு 10.00 மணி முதல் நாளை (23) அதிகாலை 2.00 மணி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
கடந்த 19ஆம் திகதி குறித்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் பாகங்களை அகற்றும் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால், குறித்த காலப்பகுதியில் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்படி, கண்டியிலிருந்து மாத்தளை நோக்கிச் செல்லும் வாகனங்கள் கட்டுகஸ்தோட்டை, மடவளை, வத்தேகம, உக்குவெல மற்றும் எல்வளை வழியாக ஏ9 வீதியைச் சென்றடையலாம்.
மாத்தளையிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் எல்வளை, உக்குவெல, வத்தேகம, மடவளை மற்றும் கட்டுகஸ்தோட்ட வழியாகப் பயணிக்க வேண்டும்.
அதேவேளை, இலகுரக வாகனங்கள் அலவத்துகொடை, ஓவிஸ்ஸ, பூஜாபிட்டிய மற்றும் அம்பதென்ன வழியாக கட்டுகஸ்தோட்டைவைச் சென்றடைந்து கண்டி நோக்கிப் பயணிக்கலாம்.
குறித்த காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தி பொலிஸாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


