Monday, June 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கண்டியில் டெங்கு நுளம்பு பெருக்கம்: பொதுமக்கள் அவசர நடவடிக்கையை கோருகின்றனர்

கண்டியில் டெங்கு நுளம்பு பெருக்கம்: பொதுமக்கள் அவசர நடவடிக்கையை கோருகின்றனர்

கண்டி நகரில் பல்வேறு இடங்களில் டெங்கு நோய் காவியான நுளம்புகளைப் பரப்பும் இடங்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் இவற்றை அகற்ற உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் இவ்வாறு உக்காத கழிவுகள் அதிகம் எரியப்படுவதுடன் நீர் நிலைகளிலும் பொலிதீன், பிளாஸ்டிக் போன்ற கழிவுகள் போடப்படுவதாலும் இவ்வாறு நுளம்புகள் பெருகும் அபாயம் உள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 9 வரை கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரா இடம் பெற உள்ளது. அக்காலப்பகுதியில் டெங்கு பரவுவதை கட்டப்படுத்த மேற்படி வடிகாண்கள் உடன் சுத்தம் செய்யபபட வேண்டும். அப்படி அல்லாத பட்சத்தில் நாடலாவிய ரீதியில் பெரஹராவுக்கு வரும் பொது மக்களால் பல இடங்களுக்கும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments