நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 316,000 வாகனங்கள் மூலம் ரூபாய் 512,547 மில்லியன் வரி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2026 ஜூன் 30 ஆம் திகதி வரையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்கள் மூலமே இந்த வரி வருவாய் பெறப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் வருவாய் உள்ளிட்ட செயற்பாடுகளை அண்மையில் மீளாய்வு செய்த அதிகாரிகள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த தகவல்களின்படி, அதிகூடிய வரி வருவாயான ரூபாய் 386,726 மில்லியன் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ததன் மூலம் கிடைத்துள்ளது.
அத்துடன்,அதிகளவான சுங்க வருவாயை ஈட்டித்தந்த பொருட்களின் பட்டியலில் முதலிடத்தை’ 1,000சிசி இற்கும் குறைவான இயந்திரக் கொள்ளளவைக் கொண்ட பெற்றோல் மோட்டார் வாகனங்கள் பெற்றுள்ளது.
அவற்றின் மூலம் கிடைத்த வருவாய் 137.4 பில்லியன் ரூபாயாகும். இது மொத்த வருவாயில் 9.96 சதவீதம் ஆகவும் பதிவாகியுள்ளது.


