Sunday, June 7, 2026
spot_img
Homeஉலக செய்திகள்இரவுநேர கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து; 66 பேர் பலி

இரவுநேர கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து; 66 பேர் பலி

கரீபியன் தீவு நாடான டொமினிகன் ரிபப்ளிக் தலைநகர் சாண்டோ டொமினிகோவில் இரவுநேர கேளிக்கை விடுதி உள்ளது.

இந்த விடுதியில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்பட பிரபலமானவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். 500 முதல் 1,000 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இசைநிகழ்ச்சி இன்று அதிகாலை வரை நீடித்துள்ளது. அப்போது, இசைநிகழ்ச்சி நடைபெற்ற கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 66 பேர் உயிரிழந்தனர். மேலும், 160 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments