Saturday, October 10, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இந்தியாவை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றி

இந்தியாவை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றி

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ரி20 கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைத் தனதாக்கியது.

இந்திய அணியின் சஞ்சு சாம்சன் 41 பந்துகளில் 82 ஓட்டங்களை விளாசினார். இஷான் கிஷன் 43 ஓட்டங்களையும், ஷ்ரேயஸ் ஐயர் 40 ஓட்டங்களையும் பெற்றனர். திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களைச் சேர்த்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் ஷாய் ஹோப் 6 பவுண்டரிகள், 9 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றார். ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 84 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றிக்கு வலுசேர்த்தார். ரொமாரியோ ஷெப்பர்ட் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம், டி20 கிரிக்கெட்டில் 250 ஓட்டங்களை வெற்றிகரமாகத் துரத்திப் பெற்ற தனது அதிகபட்ச வெற்றியை மேற்கிந்தியத் தீவுகள் அணி பதிவு செய்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments