Thursday, September 24, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இங்கிலாந்து தொடரிலிருந்து விலகினார் வனிந்து ஹசரங்க!

இங்கிலாந்து தொடரிலிருந்து விலகினார் வனிந்து ஹசரங்க!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க, உபாதை காரணமாக அணியிலிருந்து விலகி நாடு திரும்பவுள்ளார்.

வைத்திய பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தொடரிலிருந்து இடைநடுவே விலகி அவர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான தற்போதைய தொடரின் போது முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் தசை இறுக்கம் மற்றும் பிடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வனிந்து ஹசரங்க நாடு திரும்பவுள்ளார்.

இந்தப் பிரச்சனை காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஹசரங்க பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்த சச்சின்டு கொலம்பகே, தனது அறிமுக ஒருநாள் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஹசரங்கவின் உடல்நிலை குறித்த பாதிப்பின் தீவிரம் உடனடியாகத் தெரியவரவில்லை என்றாலும், இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் அவரைப் பயன்படுத்தி ஆபத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அணி நிர்வாகமும் தேர்வாளர்களும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் கொலம்பகே சிறப்பாகச் செயல்பட்ட நிலையில், ஹசரங்க இலங்கை திரும்பி தனது முதுகுப் பகுதிக்குச் சிகிச்சை பெற்று, ஓய்வெடுத்து, அக்டோபரில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்குத் தயாராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments