Tuesday, September 29, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ஹமாஸின் உயர்மட்டத் தளபதி இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழப்பு

ஹமாஸின் உயர்மட்டத் தளபதி இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழப்பு

காசா நகரில் உள்ள அல்-நஸ்ர் பகுதியில் இன்று(29) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவின் வட காசா பிராந்தியத் தளபதி இஸ் அல்-டின் அல்-பெய்க் (Izz al-Din Al-Beik) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீன அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

தாக்குதல்கள் மற்றும் படைகளுக்கெதிரான நடவடிக்கைகளைத் திட்டமிடுதல், புதிய போராளிகளைச் சேர்த்தல் போன்ற முக்கிய செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த இவரைக் குறிவைத்துத் தாக்கி அழித்ததாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

1981-இல் ஜபாலியா அகதிகள் முகாமில் பிறந்து, 2000-ஆம் ஆண்டு ஹமாஸின் அல்-கஸ்ஸாம் படையில் சேர்ந்த அல்-பெய்க், கடந்த மே மாதம் நடந்த படுகொலை முயற்சியில் இருந்து தப்பிய நிலையில், தற்போதையத் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஹமாஸ் மற்றும் மருத்துவத் துறை வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments