இந்தியாவின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 52 பந்துகளில் இரட்டை சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் இந்தியா ஏ மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஏ அணிகள் மோதின.
இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து 50 ஓவர்களில் 249 ஓட்டங்கள் எடுத்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 14.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 254 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியாவின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 28 பந்துகளில் சதத்தை எட்டியதுடன், தொடர்ந்து அதிரடியாக விளையாடி 52 பந்துகளில் இரட்டை சதத்தையும் நிறைவு செய்தார்.
இறுதியில் 53 பந்துகளில் 204 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 28 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம், அதிவேக இரட்டைச் சதம் என ஒரே இன்னிங்ஸில் பல சாதனைகளைப் படைத்து வைபவ் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.


