சமீபத்தில் இடம்பெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரபல நடிகர் சூர்யா, சமூக வலைதளங்களில் வெளியாகும் எதிர்மறையான கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் சிலர் தேவையற்ற பதிவுகளை வெளியிடுவதாகவும், அவற்றுக்கு ரசிகர்கள் பதிலளித்து தங்களது நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்க வேண்டாம் என்றும் சூர்யா கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இதுபோன்ற எதிர்மறையான கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதைத் தவிர்த்து, தங்களது நேரத்தை பயனுள்ள விடயங்களுக்கு பயன்படுத்துமாறும் அவர் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


