Thursday, November 12, 2026
spot_img
Homeகனடா செய்திகள்விசா இருந்தாலும் கனடாவுக்குள் நுழைய முடியாது!

விசா இருந்தாலும் கனடாவுக்குள் நுழைய முடியாது!

கனடாவில் நடைபெறவுள்ள உலக இளையோர் ஐஸ் ஹொக்கி (World Junior Hockey) சம்பியன்ஷிப் போட்டியில் ரஷ்ய வீரர்கள் பங்கேற்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.

ஏற்கனவே செல்லுபடியாகும் கனேடிய விசா வைத்திருந்தாலும் ரஷ்ய வீரர்கள் மற்றும் அதிகாரிகள் போட்டியில் பங்கேற்பதற்காக கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை கனடாவின் விளையாட்டுத்துறை செயலாளர் ஆடம் வான் கோவர்டன் வெளியிட்டுள்ளார்.

குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம் (IRCC), ரஷ்ய மற்றும் பெலாரஸ் நாட்டு வீரர்கள், அதிகாரிகள் ஆகியோரின் விண்ணப்பங்களைத் தனித்தனியாக மதிப்பீடு செய்து, போட்டியில் பங்கேற்பதற்காக நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.

ரஷ்யா, 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீது முன்னெடுத்த படையெடுப்பைத் தொடர்ந்து, சர்வதேச ஐஸ் ஹொக்கி போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்டிருந்தது.

எனினும், விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் (CAS), ரஷ்ய அணிகளை மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் அனுமதிக்குமாறு சர்வதேச ஐஸ் ஹொக்கி சம்மேளனத்திற்கு (IIHF) அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீதான போரை முன்னெடுக்கும் வரை, அந்நாட்டின் தேசியக் கொடியின் கீழ் விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் பங்கேற்பதற்கு கனடா அனுமதிக்காது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட வீரர்கள் நடுநிலையான அடையாளத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டாலும், தேசிய அணியாகப் பங்கேற்பதற்கு அனுமதி கிடையாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குறித்த உலக இளையோர் ஐஸ் ஹொக்கி சம்பியன்ஷிப் போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் 26ஆம் திகதி முதல் ஜனவரி 5ஆம் திகதி வரை அல்பேர்ட்டா மாகாணத்தின் எட்மண்டன் மற்றும் ரெட் டீர் நகரங்களில் நடைபெறவுள்ளன.

கனடா அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் சர்வதேச விளையாட்டுத்துறையில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments