Tuesday, September 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வடமாகாண Taekwondo போட்டியில் மன்னார் வீர வீராங்கனைகள் சாதனை

வடமாகாண Taekwondo போட்டியில் மன்னார் வீர வீராங்கனைகள் சாதனை

மன்னார் மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வடமாகாண Taekwondo சாம்பியன்ஷிப் போட்டியில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், மன்னார் பெண்கள் அணி 5 தங்கம், 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 12 பதக்கங்களை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

அதேவேளை, மன்னார் ஆண்கள் அணி 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 8 பதக்கங்களைப் பெற்று இரண்டாம் இடத்தை (First Runner-up) பெற்றுள்ளது.

இதன்மூலம் வடமாகாண மட்டத்திலான Taekwondo போட்டியில் மன்னார் மாவட்ட வீர வீராங்கனைகள் தமது திறமையை வெளிப்படுத்தி சிறப்பான சாதனையை பதிவு செய்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments