Monday, June 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழ். சுன்னாகம் புடவையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடி கணக்கான பொருட்கள் நாசம்!

யாழ். சுன்னாகம் புடவையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடி கணக்கான பொருட்கள் நாசம்!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் உள்ள புடவையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற தீ விபத்தில் 1 கோடி 25 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

வியாபாரம் நிறைவடைந்த பின்னர் பணியாளர் ஒருவர் புடவையகத்தை பூட்டிவிட்டு வீடு சென்றுள்ளார். அங்கு சுவாமி படத்திற்கு ஏற்றிய தீபத்தில் இருந்து தீப்பற்றி புடவையகம் எரிந்து நாசமாகியது.

இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments