Saturday, November 7, 2026
spot_img
Homeகனடா செய்திகள்மொடர்னா நிறுவனத்தின் புதிய தடுப்பூசிக்கு கனடாவில் அனுமதி

மொடர்னா நிறுவனத்தின் புதிய தடுப்பூசிக்கு கனடாவில் அனுமதி

மொடர்னா நிறுவனத்தின் இன்ஃபுளுவென்சா காய்ச்சலுக்கான புதிய எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிக்கும், இன்ஃபுளுவென்சா மற்றும் கோவிட்-19 ஆகிய இரண்டிற்கும் எதிரான ஒருங்கிணைந்த எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிக்கும் கனடாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கனடிய சுகாதார அமைச்சினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த இரு தடுப்பூசிகளும் 50 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கும் பயன்படுத்துவதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

எனினும், தற்போதைய சுவாச நோய் பரவல் பருவத்தின் போது இந்தத் தடுப்பூசிகள் மருந்தகங்களை வந்தடையாது என மொடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு பயன்பாட்டிலுள்ள mRNA அல்லாத சாதாரண இன்ஃபுளுவென்சா தடுப்பூசியை, 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும் பெற்றுக்கொள்ளுமாறு நோயெதிர்ப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு (NACI) பரிந்துரைக்கிறது.

65 வயதும் அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அதிக வீரியம் கொண்ட இன்ஃபுளுவென்சா தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. வயதாவதால் பலவீனமடையும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு கூடுதல் பாதுகாப்புத் தேவைப்படுவதே இதற்குக் காரணமாகும்.

அத்துடன், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் வாழ்வோருக்குக் கோவிட்-19 தடுப்பூசியை ஊக்கத்துடன் பெற்றுக்கொள்ளுமாறு குழு வலியுறுத்தியுள்ளது.

இவ்வாண்டில் கனடாவில் மொடர்னா மற்றும் பைசர் ஆகிய இரு நிறுவனங்களின் கோவிட்-19 எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments