Thursday, September 3, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்மீண்டும் மாய உலகிற்கு அழைத்துச் செல்லும் ‘ஹாரி பாட்டர்’!

மீண்டும் மாய உலகிற்கு அழைத்துச் செல்லும் ‘ஹாரி பாட்டர்’!

உலகளவில் பிரபலமான ‘ஹாரி பாட்டர்’ கதையை அடிப்படையாகக் கொண்டு HBO நிறுவனம் தயாரித்துள்ள புதிய தொலைக்காட்சித் தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து, புதிய தொடரின் காட்சியமைப்பு மற்றும் கதாபாத்திரங்கள் தொடர்பில் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக, ஹாரி பாட்டரின் பெற்றோர்களான ஜேம்ஸ் மற்றும் லிலியின் கடந்தகால வாழ்க்கை தொடர்பான மேலதிக காட்சிகள் இந்தத் தொடரில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திரைப்படங்களில் விரிவாக வெளிப்படுத்தப்படாத சில பின்னணிக் கதைகளையும் ரசிகர்கள் அறிந்துகொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, ஹாரி பாட்டர், ரோன் வெஸ்லி மற்றும் ஹெர்மியோனி கிரேஞ்சர் ஆகிய முக்கிய கதாபாத்திரங்களில் புதிய தலைமுறை இளம் நடிகர்கள் அறிமுகமாகியுள்ளனர்.

முதல் ‘ஹாரி பாட்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் டிரோல் காட்சியும் புதிய தொடரில் இடம்பெற்றுள்ளதுடன், அது முன்னைய பதிப்பை விடவும் அதிக அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், டிரெய்லரில் பயன்படுத்தப்பட்டுள்ள நீலம் மற்றும் சாம்பல் நிறம் கலந்த இருண்ட பின்னணி மற்றும் ஒளியமைப்பு, பிரபலமான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் காட்சியமைப்பை நினைவுபடுத்துவதாகவும் சில ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஜான் லித்கோ, பாப்பா எஸீடு, சாநெட் மெக்டீர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தத் தொடர், ‘Harry Potter and the Philosopher’s Stone’ கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர் 2026ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி கிறிஸ்மஸ் தினத்தன்று HBO Max தளத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments