Wednesday, November 4, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மதுப் பிரியர்களுக்கு அதிர்ச்சி

மதுப் பிரியர்களுக்கு அதிர்ச்சி

மதுபானப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதைக் காரணம் காட்டி, இலங்கையில் அனைத்து வகையான மதுபானங்களின் விலைகளையும் உயர்த்துவதற்கு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இந்த விலை உயர்வு நவம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காலியான மதுபானப் போத்தல்களை உற்பத்தி செய்யும் நிறுவனம், உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டு, போத்தல்களுக்கான விலையை உயர்த்தியுள்ளது.

இதன்படி, 750 மில்லிலீற்றர் காலிப் போத்தலுக்கு 160 ரூபாவும், 375 மில்லிலீற்றர் அரைப் போத்தலுக்கு 140 ரூபாவும், 180 மில்லிலீற்றர் கால் போத்தலுக்கு 109 ரூபாவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதன் தாக்கமாக, இலங்கையில் அதிகளவில் விற்பனையாகும் ‘கல்’ (Gal) மதுபானப் போத்தல்களுக்கான வைப்புத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 750 மில்லிலீற்றர் ‘கல்’ மதுபானப் போத்தலின் புதிய விலை, 100 ரூபா வைப்புத் தொகையுடன் சேர்த்து 3,800 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இந்தத் தொகையில் 360 ரூபா மதுபான விற்பனை நிலையங்களுக்குச் செல்வதுடன், சுமார் 611 ரூபா அரசாங்கத்திற்கான மதிப்புக்கூட்டு வரியாக (VAT) அறவிடப்படுவதாகவும் நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மதுவரி அதிகரிக்கப்படாத போதிலும், காலியான போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கான செலவு உயர்ந்துள்ளதால், அந்தச் சுமையை நுகர்வோரிடம் அறவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments