மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இன்று (30) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து விரைந்து செயல்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
சம்பவம் குறித்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



