Sunday, November 22, 2026
spot_img
Homeகனடா செய்திகள்பிரதமர் கார்னி இனிமையானவர்: டொனால்ட் ட்ரம்ப்!

பிரதமர் கார்னி இனிமையானவர்: டொனால்ட் ட்ரம்ப்!

கனடாவுடன் விரைவில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அதனை அடைவதற்கு இன்னும் அதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமது ஆசியப் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பிய டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்து இக்கருத்தைத் தெரிவித்தார்.

தனது ஆசியப் பயணத்தின் போது பிரதமர் மார்க் கார்னியுடன் (Mark Carney) குறுகிய சந்திப்பொன்றை நடத்தியிருந்த ட்ரம்ப், கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பணியாற்றி வருவதாகக் கூறினார்.

“கனடாவுடன் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருந்தாலும், பிரதமர் கார்னி மிகவும் இனிமையானவராக நடந்து கொண்டதாக” செய்தியாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்தார்.

அதேவேளை, கனடா மீது தான் வழக்கமாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப், பல ஆண்டுகளாக கனடா அமெரிக்காவை ஏமாற்றி வருவதாகவும், தனது வடக்கு அயல்நாட்டிடமிருந்து எரிசக்தி, வாகனங்கள் அல்லது தளபாட மரக்குற்றிகள் எவையும் அமெரிக்காவுக்குத் தேவையில்லை என்றும் கூறினார்.

“இருப்பினும், நியாயமான ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காகத் தமது தரப்பு பணியாற்றி வருவதாக” ட்ரம்ப் தெரிவித்தார்.

கனடிய ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள மிகக் கடுமையான தீர்வை வரிகளில் சிலவற்றைக் குறைக்கும் நோக்கில், அமெரிக்காவுடன் இடைக்கால ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு மார்க் கார்னி அரசாங்கம் முயற்சித்து வரும் நிலையிலேயே ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments