Monday, June 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பலூசிஸ்தானில் கொரில்லா தாக்குதல் - 23 வீரர்கள் உயிரிழப்பு

பலூசிஸ்தானில் கொரில்லா தாக்குதல் – 23 வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பலூசிஸ்தான் விடுதலை படை என்ற பெயரிலான புரட்சி படையினர் பல்வேறு பகுதிகளில் தொடர் கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், பாகிஸ்தான் ராணுவத்தினர் 23 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில், உயர்மட்ட அதிகாரி ஒருவரும் அடங்குவார். இந்த கொரில்லா தாக்குதலில் ராணுவ கட்டமைப்புகளும் மற்றும் நுண்ணறிவு பிரிவுடன் தொடர்புடைய கட்டமைப்புகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. பலூசிஸ்தானின் குவெட்டா, கலாத், மஸ்தங், ஜமுரான் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்த பாகிஸ்தானிய படையின் இடங்களிலும் மற்றும் நுஷ்கி, தல்பந்தின் மற்றும் பாஞ்ச்குர் பகுதிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதுபற்றி புரட்சி படை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பலூச் தேசிய விடுதலையை அடையும் வரை ஆயுத போராட்டம் தொடரும் என்ற உறுதிமொழியை மீண்டும் உறுதி செய்கிறோம் என தெரிவித்து உள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாக தங்களுடைய போராளிகளும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவார்கள் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments