Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (G.C.E O/L) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.

2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர், பரீட்சார்த்திகள் தங்களது தேசிய அடையாள அட்டையை (NIC) தயாராக வைத்திருக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களது அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பரீட்சை விண்ணப்பங்கள் கோரப்படும் போது ஏற்படும் தாமதங்கள் மற்றும் அசௌகரியங்களைத் தவிர்க்கும் நோக்கில், பரீட்சைகள் திணைக்களத்தினால் இந்த முன்கூட்டிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments