கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிணையை இடைநிறுத்தி, கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழு (CIABOC) தாக்கல் செய்த மீளாய்வு மனுவை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கடந்த நவம்பர் 3ஆம் திகதி நாமல் ராஜபக்ஷவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது


