Saturday, November 21, 2026
spot_img
Homeஉலக செய்திகள்தொப்பி விழுங்கியதால் உலகப் புகழ்பெற்ற நீர்யானை உயிரிழப்பு

தொப்பி விழுங்கியதால் உலகப் புகழ்பெற்ற நீர்யானை உயிரிழப்பு

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்திலுள்ள சின்சினாட்டி உயிரியல் பூங்காவில் உலகப் புகழ்பெற்ற நீர்யானையான ‘பியோனா’ பார்வையாளர் ஒருவரின் தொப்பி தவறுதலாக விழுங்கியதால் உயிரிழந்துள்ளது.

தொப்பியை விழுங்கியதைத் தொடர்ந்து பியோனாவுக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதன் சமிபாட்டுத் தொகுதியிலிருந்து தொப்பியை அகற்றுவதற்கு மருத்துவக் குழுவினர் பலமுறை முயற்சித்த போதிலும், அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

900 கிலோகிராமிற்கும் அதிகமான எடையைக் கொண்டிருந்த பியோனாவுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்வது சாத்தியமற்றதாக இருந்ததால், அதனை உயிர்ப்பிக்க மருத்துவக் குழுவினரால் முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

. 2017ஆம் ஆண்டு உரிய காலத்திற்கு ஆறு வாரங்களுக்கு முன்னதாகப் பிறந்த பியோனா, பிறக்கும்போது சுமார் 13 கிலோகிராம் எடையைக் கொண்டிருந்தது. அதன் உயிரைக் காப்பாற்றுவதற்காக விசேட மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டிருந்தன.

பிறந்தது முதல் சமூக வலைத்தளங்கள் ஊடாக உலகளவில் பிரபலமடைந்த பியோனாவைப் பார்வையிடுவதற்காகப் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். அதன் மறைவையடுத்து சமூக வலைத்தளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments