தெற்கு சிரியாவின் டெரா (Deraa) மாகாணத்தின் மேற்கத்திய கிராமப்புறப் பகுதியான ஜம்லா (Jamlah) பகுதிக்குள் இஸ்ரேலியப் படைகள் அத்துமீறி ஊடுருவி, பின்னர் கோலான் குன்றுகளில் உள்ள ஆக்கிரமிப்புப் பகுதியை நோக்கிப் பின்வாங்கியதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் (SOHR) தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெற்கு சிரியாவில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய வீரர்களை நேரில் சென்று பார்வையிட்ட அடுத்த நாளே இந்த ஊடுருவல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
நெதன்யாகுவின் இந்த விஜயம் தங்கள் நாட்டின் இறையாண்மையை வெளிப்படையாக மீறும் செயல் என்றும், தூண்டிவிடும் நடவடிக்கை என்றும் சிரிய அரசாங்கம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் அதிபர் பஷார் அல்-அசாத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்ததில் இருந்து, தெற்கு சிரியாவில் “பாதுகாப்பு மண்டலம்” (Security Zone) என்ற பெயரில் இஸ்ரேலியப் படைகள் முகாமிட்டு நிலைகொண்டுள்ளன.
மேற்கு டெரா கிராமப்புற பகுதிகளில் இஸ்ரேலிய படைகளின் இந்த தொடர் நடவடிக்கைகள் அப்பகுதியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.


