Friday, September 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மத்தள, பலாலி ஒப்பீட்டுக்கு ஆதாரம் என்ன?

மத்தள, பலாலி ஒப்பீட்டுக்கு ஆதாரம் என்ன?

யாழ்ப்பாண விமான நிலையத்தை மத்தள விமான நிலையத்துடன் ஒப்பிடுவதற்கு ஆதரவாக என்ன சாத்தியக்கூறு ஆய்வுகள்,மதிப்பீட்டுத் தேவை முன்னறிவிப்புகள்,வருமான கணிப்புகள் அல்லது செலவு-பயன் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? அவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமா? என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், அமைச்சரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, மத்தள விமான நிலையத்தையும், பலாலி விமான நிலையத்தையும் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,”ஓடுபாதையை சீரமைத்தல் மற்றும் முனையத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட தற்போதைய விரிவாக்க நடவடிக்கைகளுக்கு பாலாலி விமான நிலைய வளாகத்திற்குள்ளேயே போதுமான காணிகள் உள்ள நிலையில், தற்போது தேவையில்லாத போது மேலதிக தனியார் காணிகளை அரசாங்கம் ஏன் கையகப்படுத்த முயல்கிறது? பலாலி,மலியிட்டி, வசாவிளான் பகுதி மக்களின் காணிகளை அவர்களுக்கு வழங்காமல், ஓடு பாதை அபிவிருத்தி என்று குறிப்பிட்டுக் கொண்டு பொது மக்களின் காணிகயை ஏன் கையகப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வில் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் குறித்து துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரிடம் நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் இந்த கேள்விகளை முன்வைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி, வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களின் இணைப்புத்தன்மைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மிக முக்கியமானதாகும். காங்கேசன்துறை துறைமுகத்திற்காக இந்தியா கணிசமான உதவிகளை வழங்கியுள்ளதுடன், அதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் வடிவமைப்புகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தாமதத்திற்கான காரணங்கள் மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து தொடர்ந்தும் தெளிவற்ற நிலை நிலவுகிறது என்பதை சுட்டிக்காட்டினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments