Monday, September 7, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்“துருப்பிடித்த அரசியல்” தமிழகத்திற்கு தேவையில்லை - முதல்வர் விஜய்

“துருப்பிடித்த அரசியல்” தமிழகத்திற்கு தேவையில்லை – முதல்வர் விஜய்

எதிர்க்கட்சிகளைப் போல அரசியல் செய்ய தமக்கு விருப்பமில்லை என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையாற்றிய அவர், சட்டம் – ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கருத்துகளில் உள்நோக்கம் இருந்தாலும், அதில் உண்மை உள்ளதா என்பதை அரசு பரிசீலிக்கும் என்றார்.

தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், த.வெ.க. ஆட்சி அமைத்ததிலிருந்து 4 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இளம் வயதினர் குற்றங்களில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய முதல்வர், கடந்த கால ஆட்சிகளின் குற்றங்களை பட்டியலிட்டு அரசியல் செய்ய தாம் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைக்கலாம் என்றாலும், தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையில் சில உறுப்பினர்கள் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளையும் சுட்டிக்காட்டிய விஜய், மக்களின் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற அரசியல் மோதல்களை மீண்டும் தொடர வேண்டிய அவசியமில்லை என்றும், “துருப்பிடித்த அரசியல்” தமிழகத்திற்கு தேவையில்லை என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments