Sunday, June 7, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு விழாவில் பங்கேற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அண்ணா, கலைஞர் படங்களில் பாடல் இயற்றிய நாராயண கவியின் சொந்த ஊர் உடுமலை. இயற்கை எழில் சூழ்ந்து, சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு இனிப்பான சர்க்கரை அள்ளித்தரும் ஊர் உடுமலை. இயற்கை, கலை, இலக்கியம் என அனைத்து துறைகளின் கோட்டை தான் உடுமலைப்பேட்டை. ஆறுகள், மலைகள் என இயற்கை எழில் சூழ்ந்த உடுமலைக்கு வந்ததில் மகிழ்ச்சி. பெரியாரும், அண்ணாவும் சந்தித்த திருப்பூர் மாவட்டங்களில் இன்று விழா நடைபெறுகிறது. தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

காங்கேயம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. தாராபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. ரூ.172 கோடியில் நொய்யல் ஆறு மேம்பாடு செய்யப்பட உள்ளது. கீழக்கோவிலில் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. திருப்பூர் நியோ டைடல் பூங்கா, 7 ஊராட்சிகளுக்கு கூட்டுக்குடிநீர் செயல்படுத்தப்பட உள்ளது. நீராறு, நல்லாறு, ஆனைமலையாறு திட்டப்பணிகளை விரைவில் செயல்படுத்த உள்ளோம். பரம்பிக்குளம் ஆழியாறு பாசனப்பகுதியை தூர்வாற ரூ.10 கோடி ஒதுக்கப்படும். நவீன வசதிகளுடன் ரூ.9 கோடியில் மாவட்ட மைய நூலகம் அமைக்கப்படும். ரூ.5 கோடியில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம், உப்பாற்றின் குறுக்கே ரூ.7 கோடியில் புதிய தடுப்பனை கட்டப்படும். ரூ.6.5 கோடியில் புதிய வெண்ணெய் தொழிற்சாலை அமைக்கப்படும். அரசு பள்ளிக்கு நிலம் அளித்த சாதிக் பாட்ஷா பெயரில் சாலை அமைக்கப்படும் என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments