தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10 முதல் 16ஆம் திகதி வரை இங்கிலாந்தில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். சென்னை–டுபாய் வழியாக லண்டன் சென்றடைந்த அவருக்கு, அங்கு வாழும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தப் பயணத்தின் போது தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான சந்திப்புகளில் அவர் பங்கேற்க உள்ளதுடன், பிரிட்டனில் நடைபெறும் ‘Michelin Le Mans Cup’ கார் பந்தயத்தையும் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.


