Monday, October 5, 2026
spot_img
Homeஉலக செய்திகள்டென்மார்க்கில் பெரும் தரவு கசிவு: 8.8 மில்லியன் மக்களின் தனிப்பட்ட தரவுகள் ஆபத்தில்!

டென்மார்க்கில் பெரும் தரவு கசிவு: 8.8 மில்லியன் மக்களின் தனிப்பட்ட தரவுகள் ஆபத்தில்!

டென்மார்க் நாட்டின் தேசியப் பதிவேட்டில் (National Registry) திடீர் தரவு கசிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு டிஜிட்டல் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, நாட்டின் மொத்த மக்கள் தொகையான சுமார் 8.8 மில்லியன் மக்களின் தனிப்பட்ட விபரங்கள் ஹேக்கர்களின் கைகளில் சிக்கியுள்ளதாக டிஜிட்டல் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரகசிய அடையாளங்கள் அல்லது பாதுகாக்கப்பட்ட முகவரிகளைக் கொண்டவர்களின் தரவுகள் தப்பியுள்ள போதிலும், இந்தச் சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து டேனிஷ் பொலிஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளதோடு, குடிமக்கள் அனைவரும் தங்களது ஒன்லைன் பாதுகாப்பு மற்றும் சந்தேகத்திற்கிடமான தகவல்களுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments