ஏமன் தலைநகர் சனா மற்றும் சாதா மலைப்பகுதியில் உள்ள ஏவுகணை தளங்கள் மீது சவூதி தலைமையிலான கூட்டணி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல்களில் 20 பாலிஸ்டிக் ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாக சவூதி உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ரியாத் சர்வதேச விமான நிலையம் மற்றும் அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பகுதிகளை ஹூதிகள் தாக்கியதாக அறிவித்துள்ளனர்.
மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ரியாத் நகரில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.


