Thursday, November 5, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் 5 நிமிட வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்த்துக்கல் தேசிய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

41 வயதான ரொனால்டோ, தனது 23 ஆண்டுகால சர்வதேசப் பயணத்தில் 234 போட்டிகளில் விளையாடி 146 கோல்களைப் பதிவு செய்துள்ளார்.

சர்வதேச கால்பந்தில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் தக்கவைத்துள்ளார்.

2016ஆம் ஆண்டு ஐரோப்பிய சம்பியன்ஷிப் மற்றும் UEFA Nations League கிண்ணங்களை போர்த்துக்கல் அணி வெல்ல முக்கிய பங்காற்றிய ரொனால்டோவின் இந்த அறிவிப்பு உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், கழக மட்டப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments