Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சங்கிலியன் மன்னனின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

சங்கிலியன் மன்னனின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த 2ஆம் சங்கிலியன் மன்னனின் 406ஆவது நினைவு தினம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (20) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, 2ஆம் சங்கிலிய மன்னனின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய நூலொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

சிவசேனையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஓய்வு நிலை பேராசிரியர் க.தேவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மருதனார் மடம் ஆஞ்சநேயர் கோவில் ஆதீன கர்த்தா சிவஶ்ரீ சுந்தரேஸ்வரக் குருக்கள், இந்திய துணைத் தூதரக அதிகாரி நாகராஜன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ். மாநகர ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன், மதத் தலைவர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments