Sunday, June 7, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறை ஒன்றில், உலகுக்கு பொதுமறையான திருக்குறளை தந்த திருவள்ளுவருக்கு பிரமாண்டமாக 133 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 1-1-2000 அன்று அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

இந்த சிலையை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி தமிழக அரசு சார்பில் வெள்ளி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதற்காக குமரி மாவட்ட நிர்வாகம் கன்னியாகுமரி சுற்றுலாத்தலத்திலும், கடலின் நடுவே திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைப் பகுதியிலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தது. முக்கியமாக, திருவள்ளுவர் சிலைக்கும், கடலின் நடுவே மற்றொரு பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி நடைபாலம் அமைக்கப்பட்டு வந்தது. இந்த பணிகள் தற்போது முடிக்கப்பட்ட நிலையில், இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் இன்று கன்னியாகுமரிக்கு வந்தார்.

தொடர்ந்து மாலை 5 மணியளவில் கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் திருவள்ளுவர் சிலைக்கும், கடலின் நடுவே மற்றொரு பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே ரூ.37 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நடைபாலத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

முதலமைச்சரின் வருகையையொட்டி, கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments